மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா ரயில்நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதிகாலை 2:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. ரயில்நிலையம் அருகே இருப்பதால் ரயில்கள் மெதுவாக சென்றுள்ளன. அதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.