பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள் பட்டியில் டெல்லி முதல் இடம் பிடித்துள்ளது.
நாட்டில் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற தலைநகரமாக டெல்லி இருக்கிறது என தேசிய குற்ற ஆவண பிரிவு தெரிவித்துள்ளது.
அது தெரிவித்துள்ள அறிக்கையின் படி, டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% கூடுதலான அதிகரிப்பு ஆகும். இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களோடு ஒப்பிடும் போது டெல்லியில் 32.20% அதிகமாகும். அங்கு தினசரி 2 சிறுமிகள் வீதம் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி கற்பழிப்பு ஆகியவை அதிகம் இடம்பிடித்திருக்கின்றன.
இந்த பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.