நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம் வீட்டில் இருந்தே படிக்கலாம்

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள், தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளித்திட்டத்தை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்தப்பின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம்.  டெல்லி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் டெல்லி மாதிரி மெய்நிகர் பள்ளியில் இன்று முதல் 9ம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்தும் மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில், ஆன்லைன் மூலம் நேரடி வகுப்புகளை கவனிக்கவும், அதை பதிவு செய்து கொள்ளவும் முடியும். மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்க இருக்கிறோம். நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கும் உதவி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version