குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்காக, இணையதளம் வாயிலாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப்,அரியானா, மகாராஷ்டிரா, உள்பட நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
இதையடுத்து, இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கி பாராட்டினார்.