மதம் மாறினால் சாதிச்சான்றிதழ் செல்லாது

மதம் மாறிய ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களின் சாதிச்சான்றிதழ்கள் செல்லாது என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்ததாவது: ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது தானாகவே அந்த வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது.மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ். இதுகுறித்து பல புகார்கள் ஆணையத்துக்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்கள் மீது நடைபெறும் வன்முறைகளில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version