‘பிஎம் ஸ்ரீ’  பிரதமர் பள்ளி திட்டம் உருவாக்கம்

‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் பிரதமர் பள்ளி  திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

புதிய கல்விக்கொள்கையின் கீழ் இயங்க உள்ள  ‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் வளரும் இந்தியாவுக்கான பிரதமர் பள்ளி திட்டத்திற்கு ₹27,360 கோடி செலவாகும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.  இதில், ₹18,128 கோடியை மத்திய அரசு அளிக்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். முதற்கட்டமாக, கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 14,500 பள்ளிகளை இத்திட்டத்தில் சேர்க்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version