6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. அதன்படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. மற்ற கட்சிகள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி போட்டியிடவில்லை.

இந்த நிலையில் கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து தேர்தல் ஆணையம் இன்று, அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவும் நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version