“அவர் வரணும் அப்போ தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” – அடம்பிடித்த கிராமவாசியால் அதிர்ந்த அதிகாரிகள்

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், தடுப்பூசி முகாமில் பிரதமர் மோடி நேரில் வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என கிராமவாசி கூறியதால் அதிகாரிகள் அதிர்ந்து போகினர்.

இந்தியாவில் கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தார் மாவட்டத்தில் உள்ள கிக்காவாஸ் பழங்குடியின கிராமத்திற்கு நேற்று சென்றுள்ளனர்.
அங்குள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். “பிரதமர் மோடியை அழையுங்கள், அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொள்ளாததால் சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version