கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்.. ஒரு பாட்டில் பியரை எடுத்துக்கொள்.. உணவகம் வழங்கிய அதிரடி ஆபர்

குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக மதுபானம் வழங்கப்படும் என்று உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி கடந்த ஜனவரி 16 ம் தேதி தொடங்கி போடப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் வழங்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், ஏப்ரல் 1 ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், குஜராத் குர்கானின் கோல்டு சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அட்டையை காட்டினால் இலவசமாக மதுவனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மதுபிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read more – மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

இதைப்பற்றி கடை உரிமையாளர்கள் கூறியபோது, குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கோலத்தை ஊக்குவிக்கும் விதமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது. தற்போது அந்த உணவகத்தில் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version