கர்நாடகாவில் சிறுத்தையுடன் கழிவறையில் சிக்கிய தெருநாய் ஒன்று 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
கர்நாடகா:
கர்நாடக மாவட்டத்திலுள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணியளவில் திடீரென ஒரு சிறுத்தை ஒன்று தெரு நாயை விரட்டி வந்துள்ளது. சிறுத்தையிடமிருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துக்கொள்ள நாய் ஒரு வீட்டின் அருகில் இருந்த கழிவறைக்குள் புகுந்தது.
ஆனாலும் சிறுத்தை விடாமல் விரட்டி சென்று கழிவறைக்குள் புகுந்தது. அந்த நேரத்தில் கழிவறைக்குள் வந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே சிறுத்தையின் வால் தெரிந்ததை தொடர்ந்து உடனடியாக அந்த கழிவறையின் கதவை அடைத்து விட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
காலை 8.45 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்து கழிவறையின் மேல் கூரை அகற்றினர். வனத்துறையின் இந்த நடவடிக்கையால் சிறுத்தை கோபமடைந்து நாயை கொன்றுவிடுமோ என்று பயந்தநிலையில், கழிவறைக்குள் சிக்கிய அந்த சிறுத்தையும் ஒரு மூலையில் பயந்து போய் படுத்துக்கொண்டது.
Read more – பாலியல் புகாரில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் : கோடாரியால் பெண்ணை வெட்டிய கொடூர சம்பவம்
கழிவறையின் ஒரு மூலையில் நாயும் மற்றோரு பகுதியில் சிறுத்தையும் பயத்தில் படுத்து இருக்க, ஜே.சி.பி இயந்திரம் மீது ஏறிய வனத்துறை அதிகாரிகள் மதியம் 2 மணியளவில் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு வலையின் மூலம் பிடித்தனர். பிறகு, வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை காட்டில் விட்டுவிட்டு நாய் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
சுமார் ஒரு 7 மணிநேரம் சிறுத்தையுடன் ஒன்றாக இருந்த நாய் உயிருடன் வந்தது அனைவரது மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.