பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண் : 6 கி.மீ. தூக்கி சென்று உதவிய ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை 6 கி.மீ. தூக்கி சென்று ராணுவ வீரர்கள் உதவியுள்ளனர்.

காஷ்மீர் :

கடந்த சில நாட்களாக காஷ்மீர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதமாகவும், அதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டும் வருகிறது.

மேலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் அவர்களின் அத்தியாவசிய தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more – கீழே கிடக்குற பத்து ரூபாய் உங்களோடதா ? பெண்ணின் கவனத்தை திருப்பி நூதன கொள்ளை

சாலைகளிலும் பனிமூடிக் கிடப்பதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடும் பனி பொழிவால் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த ஒரு பெண்ணை, 6 கிலோ மீட்டர் தூரம் ஸ்டெரச்சரில் வைத்து தூக்கியபடி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், மனிதநேயமிக்க இந்த ராணுவ வீரர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version