கேரளாவில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கடும் கட்டுப்பாடு : பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை

கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் :

கொரோனா அச்சத்தின் காரணமாக புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. மேலும் தற்போது இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா தொற்று மிக வீரியமாக பரவி வருவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமும் நீடிக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே தடை விதித்த நிலையில் கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Read more – விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : 4 ம் தேதி மீண்டும் 7 ம் சுற்று பேச்சுவார்த்தை

இதன்படி, கேரள மாநிலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டது. மேலும், இன்று இரவு 10 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்திலும் இதேபோல் ஏற்கனவே கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டும், நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் இரவு 10 மணிக்கு மூடவும், சென்னை கடற்கரை சாலைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version