உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிரப்பி செல்கின்றனர்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 லட்சத்தை தாண்டி வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேடர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு வழங்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது. மேலும், வட மாநிலங்களில் இட பற்றாக்குறை சூழலும் நிலவி வருகிறது.
இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்தால் மட்டுமே, கொரோனா நோயாளிகளை அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
Read more – கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்த கேரளா… மேலும் ஒரு சில மாநிலங்களும் அறிவிப்பு..
இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் மையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிலும் , குறிப்பாக தல்கோத்ரா, நாதர்காஞ்ச் போன்ற இடங்களில் உள்ள மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இரவு பகல் பாராமல் காத்திருந்து ஆக்சிஜனை நிரப்பி வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதிகளில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பிற்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.