மத்திய பிரதேசத்தில் சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் தன் மனைவிக்காக கணவர் 15 நாளில் கிணறு தோண்டி அசத்தியுள்ளார்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள பான்புரை சேர்ந்தவர் பரத்சிங் (46). இவர் மனைவி தினமும் வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்ப் மூலம் சிரமப்பட்டு தண்ணீர் சேகரித்து வந்துள்ளார். அந்த தண்ணீரானது தினசரி பயன்பாட்டிற்கு போதுமானதாக இருந்துள்ள நிலையில், திடீரென அந்த அடிகுழாய் பழுதாகி விட்டது.
இதையடுத்து, மனைவி பரத்சிங்கிடம் முறையிட கூலித்தொழிலாளியான அவர். தன் மனைவிக்காக தனது வீட்டில் உள்ள காலியிடத்தில் கிணறு தோண்ட தீர்மானித்து நிதி பற்றாக்குறை காரணமாக தானாகவே தினமும் உடலுழைப்பு செய்து கிணறு தோண்ட ஆரம்பித்தார். 15 நாள் கடின உழைப்பில் கிணறு தோண்டியதில் தண்ணீர் ஊற்றெடுத்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
Read more – இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ சுரங்கப்பாதை : எல்லை பாதுகாப்புப்படை கண்டுபிடிப்பு
இதுகுறித்து, பரத்சிங் மகிழ்ச்சியாக பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டியில்: ஆரம்பத்தில் மனைவி கேலி செய்து சிரித்ததாகவும், அதன் பிறகு மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த கிணற்றின் மூலம் அவர்களது குடும்பத்தின் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்ததாகவும், காய்கறி விளைவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் அவருக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.