2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு ரூபாய்க்கான வரவு ,செலவுகள்

2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு ரூபாய்க்கான வரவு ,செலவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒரு ரூபாயில் 36 பைசாவை மத்திய அரசு கடனாக பெறுகிறது. மத்திய அரசின் அதிகபட்ச வருவாயாக ஜிஎஸ்டி மூலம், ஒரு ரூபாயில் 15 பைசா கிடைக்கிறது. வருமான வரி மூலமாக 14 பைசாவும், நிறுவனங்கள் செலுத்தும் வரியின் மூலம் 13 பைசாவும் கிடைக்கின்றன. கலால் வரிவிதிப்பின் மூலம் ஒரு ரூபாயில் 8 பைசாவும், சுங்க வரிவிதிப்பின் மூலம் 3 பைசாவும் வருவாயாக கிடைக்கின்றன. கடன் அல்லாத மூலதன வரவாக 5 பைசாவும், வரி அல்லாத வருவாய் மூலமாக ஒரு ரூபாயில் 6 பைசாவும் மத்திய அரசுக்கு வரவாக கிடைக்கிறது.

மத்திய அரசுக்கு ஏற்படும் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே அதிகமான தொகையாக உள்ளது. ஒரு ரூபாயில் 20 பைசாவை மத்திய அரசு கடன்களுக்கான வட்டியாக செலுத்துகிறது. மாநில அரசுகளுடனான வரி பகிர்வு 16 பைசாவாக உள்ளது. மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக 14 பைசா செலவு செய்யப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற பரிமாற்றங்கள் வழியாக ஒரு ரூபாயில் 10 பைசா செலவாகிறது.

மத்திய அரசின் நிதியதவி பெறும் திட்டங்களுக்காக 9 பைசாவும், மானியங்கள் வழங்குவதற்காக 8 பைசாவும் செலவு செய்யப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்கான செலவு 8 பைசாவாக உள்ளது. ஓய்வூதியம் வழங்குவதற்கு ஒரு ரூபாயில் 5 பைசா ஒதுக்கப்படுகிறது. இதர செலவுகள் ஒரு ரூபாயில் 10 பைசாவாக உள்ளது என மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version