என் தாயை காப்பாற்றுங்கள், தயவு செய்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள்.. காவல்துறை முன்பு கதறி அழுத மகன்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..

உத்தரபிரதேசத்தில் சிலிண்டரை எடுத்து சென்றால் என் அம்மா இறந்து விடுவார் என்று மகன் கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தனது தாயாரை கொரோனா சிகிச்சைக்காக மகன் அனுமதித்துள்ளார். இந்தநிலையில், அந்த பெண்ணிற்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காரணமே இல்லாமல் காவல்துறையை சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது அந்த மகன் போலீஸ் முன்பு மண்டியிட்டு எனது அம்மா இறந்துவிடுவார். ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள். நான் உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டியுள்ளார். இந்த நிகழ்வானது பலரது கண்களை குளமாகியதை தொடர்ந்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதை கண்டுகொள்ளாத காவல்துறையினர் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து சென்ற காட்சி யூத் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு சர்ச்சையானது. போலீசார் தரப்பில் அது காலியான சிலிண்டர் என்றும், பொய்யான தகவல் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தனர்.

Read more – தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்க போவது அதிமுக தான்.. அடித்து சொல்லும் அண்ணாமலை…

ஏற்கனவே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாராவது சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version