கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நவம்பர் 16-ந் தேதி நடை திறந்தது முதல் தினசரி சராசரியாக 50 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்த வருகின்றனர்.
நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில்தொடர்ந்து நான்காவது நாளாக கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று 94,369 பக்தர்களும், வெள்ளிக்கிழமை 1,10,133 பக்தர்களும், வியாழக்கிழமை 96,030 பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் சபரிமலை சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் சபரிமலையில் நடை திறக்கபட்ட 24 நாட்களில் வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றார்.