இண்டேன் காஸ் சிலிண்டர் மிஸ்டுகால் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நாடுமுழுவதும் ஒவ்வொரு மாதம் 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் டிசம்பர் மாதம் 1 ம் தேதி முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து 660 உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் தொற்று காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது.இதனால் ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று குறைந்து மீண்டும் ஜூன்,ஜூலை மாதத்தில் அதிகரித்தது.நவம்பர் மாதம் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை.
Read more – பேங்க் ஆப் பரோடா 2020 வேலைவாய்ப்பு : 41 பணியிடங்கள்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 1354 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் இந்த மாதத்தில் 56.50 ரூபாய் அதிகரித்து, 1410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இண்டேன் காஸ் சிலிண்டர் புக்கிங் அல்லது புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதியாக இந்த எண்ணிற்கு 84549 55555 தரலாம் என இண்டேன் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.