பிரிட்டன் விமானங்களுக்கு டிச.31 ஆம் தேதி வரை தடை : இந்தியா அறிவிப்பு

பிரிட்டன் விமானங்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியா தடை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில்,  வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

Read more – “புத்தரின் கொள்கைகள் சமகால சவால்களுக்கும் வழிகாட்டி” – பிரதமர் மோடி பெருமிதம் 

அதேபோல், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதையடுத்து, இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர  நாளை (செவ்வாய்க்கிழமை)  நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது

Exit mobile version