ஐ.நா.சபை 75ஆவது வருட நிறைவு : இந்தியாவின் பங்களிப்பு குறித்து ஜெய்சங்கர் பெருமிதம்

ஐ.நாவின் 75 வது ஆண்டு தினத்தையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா வின் வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பை முன்னிறுத்திப் பேசினார்.

ஐ.நா.வின் 75 ஆவது ஆண்டு நிறைவு என்பது இந்த அமைப்புக்கு ஒரு முக்கியமான மைல்கல் உலக அமைப்பு உலக நாடுகள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்து மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி செயல்பட ஒரு தளமாக உள்ளது.

“ஐ.நா.வின் 75 ஆண்டுகால பயணத்தின் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் குறிக்கோள்களையும் அதன் உறுப்பு நாடுகளின் அபிலாஷைகளுக்கு நெருக்கமாக கொண்டுவருவதற்கு கைகோர்க்கவும், வீரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட நாங்கள் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம் என கூறினார்.

Exit mobile version