நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்காக, மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், கொரோனா தடுப்பூசியை நாட்டின் அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு முன்னெடுக்க தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, தடுப்பூசியை விலைக்கு வாங்கி அனைவருக்கும் செலுத்து திட்டத்திற்காக ரூ.50 ஆயிரம் கோடியை ஒத்துக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிகிற மார்ச் 31 ஆம் தேதி வரைக்கான ஒதுக்கீடு இது என கூறப்படுகிறது. வரும் நிதியாண்டிலும் தடுப்பூசிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒரு நபருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட தலா 150 ரூபாயும், தடுப்பூசியை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்து விநியோகிக்க நபர் ஒருவருக்காக 225 ரூபாயும் செலவிட வேண்டி வரும் என கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் வரும் பிப்ரவரியில் கட்டுக்குள் வந்துவிடும் எனவும் அரசு சார்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.