விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படை விமானம்… பயிற்சி தொடங்கிய சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது!!

இந்திய விமான படை விமானம் விபத்து; விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு.

டெல்லி, மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் குவாலியர் விமானப்படை தளத்தில் மிராஜ் 2000 விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகிலிருந்த விவசாய பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானத்தை இயக்கிய விமானி “Emergency Exit” உதவியுடன் உயிர் தப்பினார். எதனால் விமானம் விபத்தில் சிக்கியது என உரிய விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக விமானப்படை விமானங்களை இதுபோல பயிற்சிக்காக செல்வது வழக்கமே! ஆனால் ஒரு சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகிறது. 2019ஆம் ஆண்டு இதே பிந்து மாவட்டத்தில் இரண்டு விமானிகள் இயக்கிய ஜெட் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, அப்போது விமானம் குவாலியர் தளத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் பிஹின்ட்ஸ் ஆலோரி கிராமத்தின் சவுத்ரி-கா-புரா பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்திய இந்திய விமானப்படையின் ஒரு சில தகவலின் படி 2016ம் ஆண்டுக்கு பிறகு 15 போர் விமானம் உட்பட 27 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version