ஜம்மு காஷ்மீரின் பட்காமில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் சரார் இ சரிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு நம் ராணுவ படையிலிருந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
இங்கு பாதுகாப்பு வீரர்களை கண்டதும் அணு பதுங்கி இருந்த தீவிர வாதிகள் ஓட முற்பட்டனர். அதில் சிலர் இந்திய ராணுவப்படை மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இவர்களும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கி சூட்டை நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில். பயங்கர வாதி கும்பலை சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.