3000 கோடியில் கோவிட் சுரக்சா தடுப்பூசி திட்டம்!!

கொரோனா தொற்று  தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டத்தை’  மத்திய அரசு  செயல்படுத்த முடிவு  எடுத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில்  வேகமாக அதிகரித்து வரும்   இந்த நோய்த்தொற்றின் காரணமாக,  இந்தியா உலக அளவில்  கொரோனா தொற்று நோய்  பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.  அதேபோல தினமும் ஏற்படும் தொற்று பாதிப்பின் அளவில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தடுப்பூசிகள் கண்டு பிடிக்கும்  முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றன  இதுவரை சில பல  சோதனைகளும்முடிவடைந்துள்ளன  எனினும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான்  கொரோனா தடுப்பு மருந்து வெளியில் வரும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது ‘கோவிட் சுரக்சா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை  தற்போது செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இப்பொழுது நிலவும் சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில்,  சுமார் 30 இந்திய நிறுவனங்கள்  தடுப்பூசியின் சோதனைகளை மேற்கொண்டு உள்ளது இதில்  ஐசிஎம்ஆர் உடன் இணைந்துள்ள பாரத் பயோடெக்,  உருவாக்கியுள்ள கோவாக்ஸின் தடுப்பூசி, மற்றும் ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசி  ஆகியவைகளின் சோதனையில்  தடுப்பு மருந்து நல்ல முன்னேற்றம் கிடைத்திருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக,கொரோனா தடுப்பூசி மற்றும்  இந்த ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்தும் விதமாக  ‘கோவிட் சுரக்சா திட் டத்தை” ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில், மேற்கொள்ள மத்தியஅரசு முடிவு  செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் தடுப்பூசிகளை விரைவாக அறிமுகம் செய்யலாம்.இதில் குறைந்தபட்சம் 6 தடுப்பூசிகளை சந்தையில் விரைவாக அறிமுகம்  செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது,  இதற்கான காலக்கட்டம்,  12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை  ஆக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற திட்டங்கள் மூலமாக மக்களுக்கு சிறந்த வகையில் சிறப்பான தடுப்பு ஊசி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வரும் ஆண்டில், ஒருநாள் தடுப்பூசி அனைவரையும் சென்றடையும் வழி வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version