இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மி.மீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 4 மாதத்தில் தயாரித்து அசத்தியுள்ளது.
பெங்களூர்:
இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மி.மீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 4 மாதத்தில் தயாரித்து அசத்தியுள்ளது. நான்கே மாதத்தில் இந்த ஆயுதம் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஸ்டல் இன்-சர்வீஸ் 9 மி.மீ வெடிமருந்துகளை இதில் பயன்படுத்தவும் முடியும்.
விமான தர அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மேல் ரிசீவர் மற்றும் கார்பன் ஃபைபரை பயன்படுத்தி உலோக 3D அச்சிடுதல் என்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த பிஸ்டல் ஆயுதப்படை வீரர்கள், தளபதிகள், விமானக் குழுக்கள், ஓட்டுநர்கள், போர் வீரர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Read more – அவசர மீட்பு பணிக்கு பயன்படுத்த துணை ராணுவத்தினருக்கு 21 ‘பைக் ஆம்புலன்ஸ்’
இந்த ” அஸ்மி ” பிஸ்டல் தயாரிப்பு செலவு ரூ. 50,000 ரூபாய் என்பதால் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகிறது. மேலும், தர கட்டுப்பாட்டு சோதனைகளை கடந்த பிறகு இந்த பிஸ்டலானது விரைவில் இந்திய ராணுவத்தில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.