தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை!!… மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மகிழ்ச்சி!!

இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் வெளியிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் இருக்கும் நிலையில் மூன்றாம் அலை வருவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் 90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version