பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை : இன்று நடத்திய பரிசோதனையில் வெற்றி

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று நடத்திய பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளது.

புதுடெல்லி:

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வங்காள விரிகுடா கடலில் கார் நிகோபர் தீவில் இன்று காலை 9.25 மணியளவில் விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் இந்த ஏவுகணையானது சரியாக 300 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை தாக்கியது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version