தென் சீனக் கடலில் போர்க்கப்பலை நிறுத்திய இந்தியா!!

சீனாவின் எதிர்ப்புகளை  சட்டை செய்யாமல், சத்தமே இல்லாமல் இந்தியா தென் சீனக் கடலில் ஒரு போர்க் கப்பலை நிறுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் இந்திய கடற்படை கப்பலை நிறுத்த சீன மக்கள் விடுதலை ராணுவம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வண்ணம் உள்ளது.

கடந்த  ஜூன் 15ஆம் தேதி கிழக்கில் உள்ள கால்வாய் பள்ளத்தாக்கில்  சீன வீரர்களுடன் ஏற்பட்ட  கடுமையான மோதலுக்கு பிறகு, இந்த முக்கிய நடவடிக்கையை இந்திய கடற்படை மேற்கொண்டுள்ளது.இந்தியா போர் கப்பலை தென் சீனக் கடலில்  நிறுத்துவதற்கு சீனா  கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதை எல்லாம் கண்டுகொள்ளாமல், இந்தியா சத்தமில்லாமல், நாட்டின் போர்க்கப்பலை கொண்டு போய் நிறுத்தியுள்ளது. 

கடந்த 2009 முதல்,  இந்தப் பகுதியில் சீன இராணுவம் மற்றும்  செயற்கையாக அமைத்த தீவுகளைப் பயன்படுத்தி  கொண்ட சீனா  பரவலாக தனது பகுதிகளை விரிவுபடுத்தியுள்ளது.

 தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட  பயங்கர வன்முறை  மோதல்களில் நம் இந்திய வீரர்கள்  20 பேர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதற்குப் பின்னரே இந்தியா சீனா இடையே  இருக்கும் பதற்றம் மிகவும்வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்பின் ஒரு கட்டத்தில், இந்தியாவின்  உறுதிகொண்ட  நிலைப்பாட்டை கண்டு சீன படைகள்  சற்று பின்வாங்கினவாங்கின. 

சீன அரசு முன்வந்துபடைகளை விலக்கிக் கொள்வதாக  கூறிய போதிலும் சீனா அதை  முழுவதுமாகசெயலில்  காட்டவில்லை.இது போன்ற சூழ்நிலையில் தான்,  இந்தியாசீனாவின்  முழு எதிர்ப்பையும் மீறி, தென் சீனக் கடலில் நம்ம நாட்டின்போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது.

சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகே உள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version