சீனப் படைகள் அத்துமீறல் எல்லையில் பதற்றம் இந்திய ராணுவ தளபதி ஆய்வு!!

சீன படைகள் அத்துமீறல் மேற்கொண்டதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் உருவாகும் சூழல் நிலவுவதால், இந்திய ராணுவ தளபதி நரவானே இன்று லே பகுதிக்கு சென்று ஆய்வு  மேற்கொள்கிறார்.

இந்தியா மற்றும் சீனா படைகளுக்கு இடையேகிழக்கு லடாக் எல்லையில்  அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  சென்ற ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டது.   இதில்,இந்திய ராணுவம்  சார்பில் 20 வீரர்கள்  இறந்துள்ளனர். சீனா  சார்பிலும்  உயிரிழப்பு  நேர்ந்துள்ளது.

இதற்கிடையே தற்போது எல்லையில் போர்ப்பதற்றம்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளதது.   இரு தரப்பினரும் தங்களது படைகளை குவிக்க  ஆரம்பித்துள்ளன.  தற்போது நிலவி வரும் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு   பின் படைகளை விலக்கிக்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியை  நிலை நிறுத்துவதற்கும்ஒப்பந்தம்  ஏற்படுத்தப்பட்டது.  அதன்பின் எல்லையில் அமைதி ஏற்பட தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கும் நிலையிலேயே,  தற்போது எட்டப்பட்ட உடன்பாடுகளை  எல்லாம்மீறி கிழக்கு லடாக் அருகே சீன ராணுவம்  சென்ற 29ம் தேதி  இரவில்  திரும்பவும் அத்துமீறி  இந்தியாவிற்கு  ஆத்திரமூட்டும் நடவடிக்கை மேற்கொண்டது. 

பாங்காங் சோ ஏரியின் தெற்கில்சீன ராணுவம் அத்துமீறலில் மேற்கொண்டதாகவும், அதனை இந்திய ராணுவம்  முழுவதுமாக  முறியடித்து உள்ளதாகவும்  ராணுவ செய்தித் தொடர்பாளர்   கூறியிருந்தார்கள்.

ஏற்கனவே பாங்காங் சோ ஏரியின்  வடக்கில் பிரச்சினை  நிலவுகின்ற நிலையில், தென் கரையிலும் சீனா  தற்போதுபிரச்சனை  மேற்கொள்வதால்பதற்றம்  நிலவும் சூழல் உருவாகியுள்ளது.  இந்த குற்றங்களை   தடுப்பதற்காக  தற்போதுபேச்சுவார்த்தை  ஏற்பட்டு வருகிறது.  இதில் இந்தியாவின்,  முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத்  மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை  நடத்திவருகிறார்.

இந்நிலையில்,  தற்போது இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று லடாக்கின் லே பகுதிக்கு  சென்றுள்ளார்.  அவர் 2 நாள் பயணமாக வந்துள்ள நரவானே, எல்லையில்  தற்போது நிலவும் சூழல் மற்றும்பாதுகாப்பு நிலவரங்களை  ஆய்வு செய்வார்.  பின்பு அங்கு இருக்கும்ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை  செய்ய உள்ளார்.

உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) முழுவதும்  தற்போது நிலவும் களநிலவரம் குறித்து ராணுவ தளபதிக்கு மூத்த படைத்தளபதிகள்  தகவல் தெரிவிக்க உள்ளனர்.சுமார்  மூன்று மாதங்களுக்கும் மேலாக சீன துருப்புக்களை எதிர்கொள்வதற்காக  தயார் நிலையில் இருக்கும் படையினர்   தற்போதைய சூழல் மற்றும் நிலைகளையும் ராணுவத் தளபதி நரவானே ஆய்வு   மேற்கொள்ள இருப்பதாக ராணுவ  வட்டாரத்தின்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version