எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை…

இந்தியா – சீனா இடையே எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறது இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்கும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா – சீனா எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கி கொள்வது குறித்தும், அங்கு ஏற்படும் பதற்றம் குறித்தும், பல கட்ட பேச்சுகள் வார்த்தைகள் நடந்தன. இருப்பினும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இரு தரப்பு தூதரக அளவிலான பேச்சு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நேற்று டெல்லியில் நடந்தது. இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில் எல்லை பிரச்சனை தொடர்பாக, இரு தரப்பும் விரிவாக பேசினர்.

எல்லையில் அமைதி ஏற்படவும், இரு தரப்பு உறவு மேம்படவும், படைகள் விலக்கி கொள்ளப்பட வேண்டும் என்பது ஒப்பு கொள்ளப்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்தும், ஏற்கனவே உள்ள பிரச்சனைகளுக்கு சுமூகத் தீர்வு காண்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Exit mobile version