மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிப்போகலாம் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

கொரோனா தொற்று காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர்:

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் 2022 ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டு இருந்தது.இதற்காக இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகின்ற 3 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விண்வெளி பயிற்சியை ரஷியாவில் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியது.இந்த நிலையில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இன்னும் ஓராண்டுகள் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்:

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் 2022 ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.இதை சோதிக்கும் வகையில் அதற்கு முன்பு இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஜூலை மாதங்களில் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆளில்லாத விண்கலம் அடுத்த ஆண்டு சோதிக்கப்பட்டு,2022 ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆண்டு தள்ளிப்போகலாம் என்றார்.மேலும் அவர் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டும்,லேண்டர், ரோவரை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version