பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்த விஞ்ஞானி : கருவி வெளிவராமல் இருக்க விஞ்ஞானியை 3 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் வைத்து கொல்ல முயற்சி

பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் ரேடார் கருவியை கண்டு பிடித்ததால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானி தபன் மிஸ்ரா 3 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் ரேடார் கருவியை கண்டு பிடித்ததால் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விஞ்ஞானி தபன் மிஸ்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரேடார் கருவி மூலம் செயற்கைக்கோள் படம் பிடிக்கும் உயரிய தொழில் நுட்பத்தில் என்னுடைய பங்களிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், இந்த தொழில் நுட்பத்தின் மூலம் பூமியின் மேற்பரப்பை இரவு பகல் உள்ளிட்ட எந்த நேரத்திலும் தெளிவாக படம் எடுக்க முடியும்.

Read more – அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி

மேலும், இந்த ரேடார் கருவியானது பனி, மேக மூட்டம், தூசி உள்ளிட்ட எந்த சூழலையும் தெளிவாக படம் எடுக்க கூடியதால் இந்திய ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வெளிநாடுகளில் இருந்து இந்த கருவியை வாங்கும் நிலைமை தடுக்கப்படும். எனவே உள்நாட்டு கருவிகளை ஏற்றுக்கொண்டால், வெளிநாட்டில் இருந்து வாங்கும் ஆர்டர்கள் ரத்து ஆகும் என்பதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பாக என் சாப்பாட்டில் டிரியோக்சைடு ரசாயன விஷம் கலந்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Exit mobile version