பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், டெல்லியில் சந்தித்துப் பேசியது என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வந்துள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலை குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றியும் கவர்னர் விளக்கியுள்ளாராம்.இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை செயலாளரையும் சந்திக்கவுள்ளார் கவர்னர் புரோகித்.