விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : 4 ம் தேதி மீண்டும் 7 ம் சுற்று பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 2 அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி :

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர நேற்று விவசாய அமைப்பினருடன் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், மத்திய அரசு சார்பில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் 41 விவசாய அமைப்பினர்களுடன் கலந்துகொண்டனர்.

Read more – சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுக்கு 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனர். அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த 2 அம்சங்கள் பின்வருமாறு;

சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டம் – விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பதற்காக அபராதம் இல்லை.

மானிய மின்சார கட்டணம் – நீர்ப்பாசனத்துக்காக விவசாயிகளுக்கு மாநிலங்கள் வழங்கி வருகிற மானியம் தொடரும்

மேலும், குறைந்த பட்ச ஆதரவில்லை மற்றும் 3 வேளாண் மசோதாக்கள் தொடர்பான அம்சங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக வரும் 4 ம் தேதி மீண்டும் விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

Exit mobile version