புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியில் திமுக அதிகம் இடம் மற்றும் முதல்வர் பதவியையும் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.
புதுச்சேரி :
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக மற்றும் மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். ஏற்கனவே திமுக காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து 2 ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த தொகுதி பங்கீடு கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read more – சமரசம் இல்லாமல் சண்டையிடுவேன்… திருவொற்றியூரில் சீறிப்பாய்ந்த சீமான்..
திமுக சார்பில் சில நாட்களுக்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தநிலையில், பேச்சுவார்த்தையின்போது, திமுக அதிக இடங்களை கேட்டதாகவும், முதலமைச்சர் பதவியையும் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்சி கலைந்த நிலையில் திமுக முதல்வர் பதவி கேட்பது காங்கிரஸ் கட்சியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை காங்கிரஸ் 8 முறையும், திமுக 4 முறையும் ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.