கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு 370 ஆவது பிரிவு நாடாளுமன்றத்தில் ரத்து செய்ய பட்டு, யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிரிக்கப்பட்டன.

இதனையடுத்து அங்கு கலவரம் வெடிக்கும் என கருதி பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு கூடுதலாக துணை ராணுவப் படையினர் கடந்த ஒரு வருடமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பகுதிகளில்குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் ஓராண்டுக்கு பிறகு, இப்போது முதல்முறையாக பெரிய அளவுக்கு கூடுதல் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) மொத்தம் 40 கம்பெனிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF), எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் சஸ்திர சீமா பால் (SSP) ஆகியவற்றின் 20 நிறுவனங்களும் இருக்கும் இந்த வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வாபஸ் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டுக்கு பிறகு, இப்போதுதான் முதல்முறையாக பெரிய அளவுக்கு கூடுதல் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இதுபற்றி மூத்த CAPF அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் இருந்து படைகள் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக அவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஓய்வு தேவைப்படுகிறது. மீண்டும் பயிற்சி தேவைப்படுகிறது. எனவே அவர்கள் வாபஸ் பெற படுவார்கள் என தெரிவித்தார்.