வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கைது

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவ தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவ தலைவர் உமர் காலித் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

டெல்லி போலீசார் சிறப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் காலித்தை கைது செய்து உள்ளனர்.போலீசார் காலித்திடம் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர்.அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாஃப்ராபாத், ஷாகுர் பஸ்தி, சிவ் விஹார், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி 24-26 வரை பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 581 பேர் காயமடைந்தனர்.

Exit mobile version