மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் முறையீடு

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி;

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் தென் மாவட்டங்களில் தொடர்ந்து முதற்கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தினை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.மேலும் அந்த டார்ச் லைட் சின்னமானது எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதால் இந்த சின்னத்தினை வழங்கப்பட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதுகுறித்து,மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரத்தின் சட்ட ரீதியாக போராடி டார்ச் லைட் சின்னத்தை மீட்போம் என தெரிவித்திருந்தார்.தற்போது தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்திருக்கிறார்.

Read more – சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி நாள்தோறும் 5000 பக்தர்கள் அனுமதி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு மக்கள் நீதி மையத்துக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version