பாதி இந்தியா பட்டினியில் இருக்கும் போது புதிய நாடாளுமன்றம் அவசியமா ? கமல்ஹாசன் கேள்வி

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து பிரதமருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார்.

இந்தநிலையில்,பிரச்சாரத்திற்காக மதுரை கிளம்புவதற்கு முன்பு கமல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more – இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது : நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

இதுகுறித்து,சீனாவில் பெருஞ்சுவர் கட்டும் பணியிலன் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள்.அதுபோல கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினியில் இருக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரை காப்பதற்கு ?

பதில் சொல்லுங்கள் எங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு பிரதமரே…. என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version