கர்நாடகாவில் ஜனவரி 1 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் வருகின்ற ஜனவரி 1 ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூர்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடுமுழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.தற்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

Read more – தனுஷ் திரைப்படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “அசுரன்”

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி கர்நாடகாவில் ஜனவரி 1 ம் தேதி இருந்தே 10-ம் வகுப்பு மற்றும் பிற ஆண்டு வகுப்புகளை தொடங்கலாம் என்றும்,பள்ளி மற்றும் கல்லூரி திறக்கலாம் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இயையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடகவில் வருகின்ற ஜனவரி 1 ம் தேதி முதல் 10 ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2 ம் ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்தோம்.மேலும்,புத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்.அதில் 6 முதல் 9 ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version