பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவு : அச்சத்தில் பொதுமக்கள்

பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவாக உள்ளதாக கர்நாடக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில், கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் ஒரு நாள் பாதிப்பு நேற்று முன்தினம் 20 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கர்நாடக அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் பேர் காணவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, கர்நாடக அமைச்சர் அசோகா தெரிவிக்கையில், பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேரைக் காணவில்லை என்றும், நோயாளிகளின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Read more – மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்… பலத்த பாதுகாப்புடன் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு கர்நாடக அரசு சார்பில் இலவசமாக மருந்துகள் வழங்கி வந்ததால் இதன் மூலம் 90 சதவீத மக்கள் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version