கேரள தலைமைச் செயலகத்தில், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
கேரளா தலைமை செயலகத்தில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தஅறையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பல முக்கியமானஆவணங்கள் எரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதைப்பற்றி காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது வேண்டுமென்றே தீவிபத்து ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும் தங்க கடத்தல் வழக்கின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியே இந்த தீ விபத்து என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தலைமைச் செயலக வளாகம் முன் ஒன்றுதிரண்டு அவர்கள் தர்ணா போராட்டத்திலும் இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியினரும் இந்த தீவிபத்து திட்டமிட்ட சதி என்று கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் பதட்டமான சூழல் காரணமாக அங்கு போலீசார்கள் முழுவதுமாக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், தலைமைச் செயலகத்துக்கு உள்ளே வர முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து அவர்களை பின்வாங்கச் செய்தனர். இதனை அடுத்து முக்கிய ஆவணங்கள் இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதை அம்மாநில தலைமைச் செயலாளர் உறுதிசெய்து இந்த தீ விபத்து சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து தொடர்பாக சட்டப்பேரவை கேரள சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா, அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேசியுள்ளார். அதற்கடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தீ விபத்தில் தங்கள் சார்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில், எப்படி தீ விபத்து நேர்ந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக கவர்னரிடம் நான் விரிவாக எடுத்து வைத்துள்ளேன் என்றும் விரைந்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி உள்ளேன் என்றும் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.