கேரள கோர விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் …

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரை இறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் விபத்துகுள்ளானது

துபாயில் இருந்து நேற்று 190 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் I.X-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானி உட்பட விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 173 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 15 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கேரள விமான விபத்தில் . உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version