கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோட் விமானநிலையம் வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு 24 ஆம்புலன்ஸ் விரைந்துள்ளன.

விபத்து நிகழ்ந்த விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டது. பயணிகள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள கட்டுப்பாட்டு அறையை 04832719493 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version