வழக்கறிஞர்களின் கருத்தும் முக்கியம்.. லக்கிம்பூர் வழக்கு தற்காலிமாக ஒத்திவைப்பு!!


லக்கிம்பூர் வழக்கு தற்காலிமாக ஒத்திவைப்பு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உ.பி-யை சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் சிவகுமார் திரிபாதி மற்றும் சி.எஸ்.பாண்டே ஆகியோர் தலைமை நீதிபதி என்.வி ராமணவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறையை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் இன்று விசாரிதத்து. அப்போது, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்களின் கருத்தை கேட்க வேண்டியது அவசியம் என்பதால் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரான பின்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என கூறி தற்காலிகமாக வழக்கை தள்ளிவைத்தனர்.

Exit mobile version