இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 378 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் மொத்தமாக 3,37,16,451 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 378 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,47,751 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு அச்சுறுத்திய நிலையில் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 28,178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,86,180 ஆக உயர்ந்து நம்பிக்கையளிக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,82,520 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 87,66,63,490 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 54,13,332 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.