ஓரின திருமணங்களுக்கு இந்தியாவில் இன்னும் சாத்தியமில்லை…

நமது நாட்டுச் சட்டங்களும், அதன் மீதான மதிப்பும்தான் தன்பாலின திருமணத்திற்கு தடை விதிக்கக் காரணம் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டங்களின் கீழ் தன்பாலினத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்து சட்ட அமைப்பில் கணவன், மனைவி வரைமுறை குறித்து கூறி, தன்பாலின திருமணத்தில் அதில் யார்? எந்த முறையில் உறவு வருவார் என வினவினார்.

மேலும் ஓரின திருமணங்களுக்கு இந்தியாவில் இன்னும் சாத்தியமில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Exit mobile version