நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான நெறிமுறைகள்

UNLOCK-3.0 || நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

எதற்கெல்லாம் அனுமதி:  

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படலாம்;

சுதந்திர தினம், சமூக இடைவெளியைப் பின்பற்றி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்பட வேண்டும்;

இரவு நேரத்தில் தனிநபர் வெளியில் செல்வதற்கு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்  வரும் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து  முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன;

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து, வரையறைக்குட்பட்ட முறையில் அனுமதிக்கப்படும். இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்;

இதெல்லாம் கிடையாது:  

மாநில அரசுகள்/ யூனியன் பிரேதேசங்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின், பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது என்று தீர்மானிக்கப்பட்டது

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளைத் தவிர, அணைத்திருக்கு அனுமதி அளிக்கப்பட்டுய்ள்ளது:

மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், உல்லாச விளையாட்டு பூங்காக்கள்

சமூக / அரசியல் / விளையாட்டு / பொழுதுபோக்கு / கல்வி / கலாச்சார / மத செயல்பாடுகள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை.

கட்டுபாட்டு மண்டலங்களில்  லாக் டவுன் தொடரும்  

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கட்டுபாட்டு மண்டலங்களில், முடக்கநிலை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பரவல் மண்டலங்களில் நடைபெறும் செயல்பாடுகளை, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடுமையாகக் கண்காணித்து, இந்த மண்டலங்களுக்கான நெறிமுறைகளைத் தீவிரமாக செயல்படுத்தும்.

65 வயதைக் கடந்தவர்கள், உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version