ஒரு தலையாக காதலித்த இளைஞரை மாணவி வயது காரணமாக காதலை ஏற்கமறுத்த ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள தூர்ப்புபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காயத்திரி, இவர் சித்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். சிந்தமகுலாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர் ஒருதலையாகக் காதலித்ததோடு தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்து நிலையில், எனக்கு 20 வயதாகிறது உனக்கு 18 வயதே ஆவதால் உன் காதலை என்னால் ஏற்கமுடியாது என்று காயத்திரி நிராகரித்து உள்ளார்.
இந்தநிலையில், டெல்லி பாபு காயத்திரியை அடையும் நோக்கில் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் காயத்திரியை டெல்லிபாபுவிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Read more – தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண் : 43½ ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு
இதனால் கோபமடைந்த டெல்லிபாபு கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த காயத்திரியை இரு சக்கர வாகனத்தில் சென்று கத்தியால் பயங்கரமாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் காயத்திரியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காயத்திரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய டெல்லிபாபுவை தேடி வருகின்றனர்.