வந்தே பாரத் திட்டத்தில் இடம் பெற்ற மதுரை விமான நிலையம்!!

இந்தியாவில் கொரோனா  தொற்றுநோய் பாதிப்பு நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு,டெல்லி, போன்ற மாவட்டங்களில்கொரோனா நோய் தொற்றின் வேகம்  அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால்  இந்தியாவில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  கொரோனா பாதிப்பால் அயல்நாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலை உருவானது  அவர்கள் நாடு  திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  தற்போது அவர்களை மீட்பதற்காக மத்திய அரசு வந்தே பாரத் எனும்திட்டத்தை தொடங்கி  வைத்திருந்தது. இந்த திட்டத்தின்  மூலம்    ஐநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள்  சிங்கப்பூர், துபாய்  போன்ற நாடுகளில் இருந்து  தற்போது மீட்கப்பட்டு வருகின்றனர்.

 இதனிடையே  வந்தேபாரத் திட்டத்தின்  அடிப்படையில்  வரும் செப்டம்பர் மாதம் 11 விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கும்  என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சிங்கப்பூர் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் அடங்கும். இவையாவும் மதுரையில் தரை இறங்க உள்ளன.

Exit mobile version